ஈரோடு திரு.வி.க. சாலையில் இருந்து ஜான்சி நகர் 2-வது வீதிக்கு செல்லும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டிருந்தன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்றனர். எனவே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் பிரசுரமானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.