கரூர் மாவட்டம் புகழூர் நான்கு ரோடு பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது இந்த பொது சுகாதார வளாகம் சிதலமடைந்து சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே இந்த சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்தும்போது இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான சுகாதார வளாகத்தை அகற்றிவிட்டு புதிய சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.