மதுரை நகர் டி.பி.கே. சாலை தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக்-பெரியார் பஸ் நிலையம் செல்லும் சாலையில் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இவ்வழித்தடத்தில் அன்றாடம் பயணிக்கும் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் செல்லும் இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.