ஈரோடு பாரதி தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்துகின்றன. இதனால் அந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?