மதுரை அவனியாபுரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் தெருநாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிப்பதுடன், வாகன ஓட்டிகளையும் துரத்துகிறது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தொல்லை தரும் தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?