திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மெயின் ரோடு ஓரம் ஏராளமான கடைகள் உள்ளன. அந்தக் கடைகளின் உரிமையாளர்கள் பெயர் பலகையை சாலையோரம் வைக்கின்றனர். இதனால் இரு வாகனங்கள் மாறி செல்லும்போதும், இருசக்கர வாகனங்கள் செல்லும்போதும் விபத்து ஏற்படுகின்றன. மெயின்ரோடு ஓரம் இருபக்கமும் கடையின் பெயர் பலகை வைப்பதை அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும்.
-குமார், தூசி.