குழந்தைகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்

Update: 2025-07-20 10:49 GMT

அரியலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி வருகின்றன. அருகிலுள்ள கிராமங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வந்து சேரும் இந்த தெருநாய்கள் காவனூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. தெருக்களில் செல்லும் வாகனங்களின் குறுக்கே சென்றும், நடந்து செல்பவர்களையும் கடிக்க பாய்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் பெண்களும், குழந்தைகளும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்