அட்டகாசம் செய்யும் குரங்குகள்

Update: 2025-07-20 10:49 GMT

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் குரங்குகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை இந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கும் புகுந்து நாசம் செய்கின்றன. அதேபோல், சுற்றுவட்டாரத்தில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிர் செய்யப்பட்டிருக்கும் பயிர்களையும் தொடர்ந்து நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் அதிகளவில் அவதியடைந்து வருகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்களையும் இவை தொந்தரவு செய்து வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு குரங்குகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்