ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், சிறுவர்களை நாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.