அந்தியூர்-அம்மாபேட்டை இடையே இயக்கப்பட்ட ஏ4 அரசு பஸ் கடந்த 4 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் பஸ் வசதியின்றி அவதியடைந்தனர். எனவே இந்த பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் பிரசுரமானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது ஏ4 டவுன் பஸ் அந்தியூர்- அம்மாபேட்டை இடையே இயக்கப்பட்டு வருகிறது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
செல்வன், அந்தியூர்.