தெருநாய்கள் தொல்லை

Update: 2025-07-13 17:53 GMT

நாமக்கல் மாநகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இந்த அனைத்து வார்டுகளிலும் பொது பிரச்சினையாக தெருநாய் தொல்லை இருந்து வருகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால், சிலர் விபத்தில் சிக்குகிறார்கள்.இதேபோல் காலையிலும் தெருக்கள் வழியாக செல்லும் சிறுவர், சிறுமிகளை நாய்கள் துரத்தி கடிப்பது போன்ற அசம்பாவித சம்பவங்களும் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சேந்தமங்கலம் சாலையில் இறைச்சி மற்றும் மீன்கடைகள் அதிக அளவில் இருப்பதால் இங்கு சுற்றித்திரியும் தெருநாய்கள் ரெயில் நிலையத்திற்கு வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருள், நாமக்கல்.

மேலும் செய்திகள்