கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல்- கடத்தூர் செல்லும் சாலையோரம் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்ல வாய்க்கால் அமைக்கப்பட்டது. தற்போது இதில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்றி கால்வாயை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.