வாணாபுரம் அருகே தேவரடியார்குப்பத்தில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தை ஆக்கிரமித்து மரக்கட்டைகள் மற்றும் சிமெண்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு பணிகளுக்காக சென்று வந்த மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இது குறித்த செய்தி படத்துடன் புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து கிராம சேவை மைய கட்டிடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். இதனால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.