செஞ்சி நரசிங்கராயன்பேட்டை எம்.ஜி.ஆர். நகர் 15-வது தெருவில் குடிநீர் குழாயில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருகிறது. இந்த நீரை கிராம மக்கள் குடிப்பதால் அவர்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.