அடிப்படை வசதி

Update: 2025-07-13 14:34 GMT

சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட சுள்ளிக்காடு பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஓடி வருகிறது. இதன் காரணமாக நோய் பரவும் ஆபாயம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள சாலையும் பழுதடைந்து காணப்படுகிறது. இதுதவிர தெருவிளக்கு வசதியும் இல்லை. அடிப்படை வசதியின்றி தவித்து வருகிறோம். சுள்ளிக்காடு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்