புதர்மண்டி கிடக்கும் அங்கன்வாடிமையம்

Update: 2025-07-13 12:48 GMT

கும்பகோணம் உள்ளூர் கிராம பஞ்சாயத்து உட்பட்ட ராமகிருஷ்ணாநகரில் அங்கன்வாடிமையம் உள்ளது. இந்த மையத்தின் கட்டிடம் முறையான பராமரிப்பின்றி உள்ளது. அங்கன்வாடிமையத்தை சுற்றிலும் செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டி இருக்கிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அச்சத்துடன் விட்டு செல்லும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்