ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 6 லிப்ட்கள் உள்ளன. அவற்றில் 2 லிப்டுகள் மட்டுமே நல்ல நிலையில் பயன்பாட்டில் உள்ளன மீதமுள்ள 4 லிப்ட்களும் சரிவர செயல்படாத வகையில் முறையான பராமரிப்பு இன்றி அடிக்கடி பழுதாகின்றன. இதனால் இங்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் குறிப்பாக கர்ப்பிணிகள், முதியோர்கள் மற்றும் உள்நோயாளிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்குமா?