செடிகளை அகற்ற வேண்டும்

Update: 2025-07-13 11:29 GMT

வேர்க்கிளம்பி அருகே வெட்டிக்குழியில் இருந்து சிற்றாறு பட்டணம் கால்வாய் கரையோரமாக சாமியார்மடம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் செட்டிச்சார்விளை குருசடி பாலம் முதல் கருநீலிகுளம் பாலம் வரை செடிகள் ஆள் உயரத்திற்கு வளர்ந்து புதர்கள் போல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையோரத்தில் வளர்ந்துள்ள செடிகளை வெட்டி அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏசுதாசன், உள்ளுவெட்டி காப்புவிளை.

மேலும் செய்திகள்