கூடலூர் பஸ் நிலையத்தில் தரைத்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும். இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் மழையில் நனைந்தபடி காத்திருந்து பஸ்சில் பயணம் செய்ய ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பஸ் நிலையத்தில் மேற்கூரை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.