திருப்பூர் கருப்பகவுண்டன்பாளையத்தில் மாநகராட்சி பள்ளி மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையம் உள்ளது. இதற்கு அருகில் உள்ள சுகாதார வளாகம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் வளாகத்திற்கு உள்ளே ஆமணக்கு செடிகள் மற்றும் சுவர்களில் அரச மரம் முளைத்து உள்ளது. அப்பகுதியை சுற்றிலும் செடி- கொடிகள் முளைத்து புதர் போன்று உள்ளதால் அதற்குள் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து செடி-கொடிகள் சூழ்ந்துள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
ராசுக்குட்டி, திருப்பூர்.