ஊத்தங்கரை ஒன்றியம் கீழ்மத்தூர் கிராமத்தில் 15-வது நிதிக்குழு மாநில திட்ட நிதியில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் 2020-21-ம் ஆண்டு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இது தற்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் பராமரிப்பின்றி இருக்கிறது. எனவே சும்மா கிடக்கம் சுகாதார வளாகத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்களா?
-பார்த்திபன். கீழ்மத்தூர்.