இருக்கைகள் தேவை

Update: 2025-07-06 18:05 GMT
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் புகார் மனு கொடுக்க வருகின்றனர். அங்கு இருக்கை வசதி இல்லாததால் பொதுமக்கள் கால்கடுக்க நின்றும், தரை மற்றும் அலுவலக படிக்கட்டுகளில் அமர்ந்தும் மனு அளித்துச் செல்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இருக்கை வசதி ஏற்படுத்தித்தர உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்