ஊசலாடும் தீத்தடுப்பு வாளி

Update: 2025-07-06 17:37 GMT

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். இதில் மனு அளித்து வருவதால் எப்போதும் பொதுமக்களின் வருகை அதிகமாக இருக்கும். மேலும் அங்கு மனு கொடுக்க வரும் மக்கள் சிலர் தீக்குளிப்பு முயற்சியை கையில் எடுக்கின்றனர். அவற்றை தடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு பகுதிகளில் தீத்தடுப்பு கருவிகள் மற்றும் மணல் வாளிகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கலெக்டர் அலுவலகத்தின் வாசலில் வைக்கப்பட்டுள்ள வாளியில் மணலும் இல்லாமல், தண்ணீரும் இல்லாமல் காற்றில் ஆடி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பாதுகாப்பு உபகரணங்களையும், தண்ணீர் தொட்டிகளையும் சரிவர பராமரித்து அவை அவசரகாலத்தில் எவ்வித தடையும் இன்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்