குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது குப்பம்பாளையம் ஊராட்சி. குப்பம்பாளையம் ஊராட்சி வெள்ளசெட்டிபாளையம் கிராமத்தில் மின்கம்பங்களில் செடி-கொடிகள் படர்ந்தும் மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்தும் காணப்படுகிறது. மழைக்காலங்களில் மழைநீர் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பங்களில் படர்ந்து உள்ள செடி-கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.