ஈரோடு காந்திஜி ரோட்டில் இருந்து சூரம்பட்டி செல்லும் வழியில் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக குழி தோண்டப்பட்டது. ஆனால் குழாயை சாிசெய்துவிட்டு குழியை சரியாக மூடாததால் அதிலுள்ள மண் சரிந்து அருகே உள்ள சாக்கடை கால்வாயில் விழுந்துள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. எனவே குழியை சரியாக மூடி கால்வாயில் சரிந்து விழுந்த கற்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’யில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குழியை மூடி மண் சரிந்து அருகே உள்ள சாக்கடை கால்வாயில் விழுவது தடுக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாாிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.