தெருநாய்கள் தொல்லை

Update: 2025-07-06 12:36 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு தாம்பரம் கிருஷ்ணா நகர் 7-வது தெருவில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் துரத்துகின்றது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்