சென்னை மாதவரம், வி.எஸ்.மணிநகருக்கு திரும்பும் வழியில், வடபெரும்பாக்கம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று உள்ளது. இங்கு மாலைநேரத்தில் இருந்து கூட்டம் அலைமோதுவதால் இந்த வழியாக வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்கள், பள்ளி முடிந்து செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மதுகடையை அங்கிருந்து அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.