தெருநாய்களால் விபத்து அபாயம்

Update: 2025-07-06 11:29 GMT

அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை இந்த வழியாக செல்லும் பொதுமக்களை கடிக்க பாய்கின்றன. மேலும் இருசக்கர வாகனங்களின் குறுக்கே சென்று விழுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்