சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் காரைக்குடி- திண்டுக்கல் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. இதனால் சாலையில் வாகனஓட்டிகள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். எனவே இச்சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.