கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அங்கு கடந்த சில நாட்களாக இரவில் சிறுத்தை நடமாட்டமும் உள்ளது. அத்துடன் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டமும் காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள புதர் செடிகளை போர்க்கால அடிப்படையில் வெட்டி அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.