கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பார்வுட் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கடந்த பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கிராம நிர்வாக அலுவலகத்தை முறையாக திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.