பத்மநாபபுரத்தில் இருந்து திற்பரப்பு அருவிக்குச் செல்லும் சாலையில் எப்போதும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோரத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை கோட்டைச்சுவரில் அதிகளவில் செடி, கொடிகள், பெரிய மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், கோட்டை சிதலமடைந்து வருகிறது. எனவே, புராதன சின்னமான கோட்டை சுவரை பாதுகாத்திட செடி, கொடிகள், மரத்தினை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.