போடியில், தேவாரம் சாலையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகில் டாஸ்மாக் மதுபான கடை செயல்படுகிறது. அங்கு மது குடிக்க வருபவர்கள் மதுபோதையில் அட்டகாசம் செய்வதால் மாணவிகள் அந்த வழியாக கல்லூரிக்கு செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.