அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுமேட்டூர் கிராமத்தில் காந்திநகர் செல்லும் வழியில் தற்காலிக எரிமேடை அமைத்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் மழை காலங்களில் அருகே உள்ள குடியிருப்புவாசிகள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயான பயன்பாட்டுக்கு தனியாக இடம் ஒதுக்கி அங்கு எரிமேடை அமைத்து தர முன்வருவார்களா?
