நெய்வேலி அடுத்த கொள்ளுக்காரன்குட்டையில் வடலூர்-பண்ருட்டி செல்லும் சாலையில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் மாடுகள் சாலையிலேயே படுத்து கிடப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.