திருப்பூர் முத்தணம்பாளையத்தில் இருந்து செவந்தாம்பாளையம் செல்லும் இப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதில் சாலையின் ஓரத்தில் உயர்மின் கம்பிகள் செல்கின்றது. அந்த மின்கம்பியை சுற்றிலும் செடி,கொடிகள் படர்ந்து மிகவும் ஆபத்தான முறையில் உள்ளது. அவ்வப்போது மழை பெய்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் மின்கசிவு ஏற்பட்டு ெ்பரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்சாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.