விழுப்புரம் நேருஜி சாலையில் ஒரு தியேட்டர் அருகே இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவர்கள் மதுபோதையில் அவ்வழியாக வரும் பெண்கள் மற்றும் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் இரவு வேளைகளில் அவ்வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.