விழுப்புரம் அருகே புருஷானூரில் உலர்களம் இல்லாததால் அப்பகுதி விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சாலைகளில் உலர வைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே அப்பகுதியில் உலர்களம் அமைக்க வேண்டியது அவசியம்.