நெய்வேலி அடுத்த பெரியாக்குறிச்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளை விரட்டி, விரட்டி கடிக்கப் பாய்கின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.