சேலம் 4 ரோடு, 5 ரோடு ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் சிலர் அதிவேகமாக செல்கின்றனர். இதனால் அவா்கள் சாலையில் நடந்து, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது மோதி உயிர்ப்பலி ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும் நள்ளிரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த படியும், அதிக ஒலி எழுப்பியபடி கூச்சலிட்டவாறும் சில வாலிபர்கள் செல்கின்றனர். எனவே விதிமுறைகளை பின்பற்றாமல் செல்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரண், சேலம்.