பழனி இந்திராநகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொது கழிப்பறை கட்டும் பணி தொடங்கியது. ஆனால் பாதி கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட கழிப்பறை கட்டுமான பணியை மீண்டும் தொடங்க வேண்டும்.