அரூர் அருகே நாச்சினாம்பட்டி கிராமத்தில் அண்ணா சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை தற்போது பராமரிப்பின்றி உள்ளது. இந்த சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வலையால் செய்யப்பட்ட கூண்டு துருப்பிடித்து சேதம் அடைந்தது. மேலும் சிலையின் கீழ் பகுதியில் உள்ள பீடமும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த சிலையை சீரமைக்க சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம், நாச்சினாம்பட்டி.