சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான போலீஸ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள காலி இடங்களை மர்மநபர்கள் ஆக்கிரமித்து வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஒரு சில வாகனங்கள் பல மாதங்களாக உபயோகப்படுத்தாமல் தூசி படிந்து உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.