அரியலூர் நகரின் பல இடங்களில் தற்போது ஏராளமான பன்றிகள் சுற்றி வருகின்றன. மின்நகர், கல்லங்குறிச்சி சாலையில் உள்ள வாய்க்கால், ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலை, சித்தேரி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வ.உ.சி. தெரு பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அப்பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் உழன்றும், குப்பைகளை கிளறியும் வருகின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக செந்துறை சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்தின் நுழைவு பகுதியில் பன்றிகள் தொல்லை மிக அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு நகருக்குள் பன்றிகள் வலம் வருவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.