ஓடையை பராமரிக்க வேண்டும்

Update: 2025-05-25 06:59 GMT

வடுகன்பற்று கூண்டு பாலத்தில் இருந்து பொற்றையடி செல்லும் நான்கு வழிச்சாலையில் தேவகுளம் உள்ளது. இந்த குளத்தில் இருந்து தண்ணீர் மறுகால் ஓடை வழியாக தலக்குளம் செல்கிறது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த ஓடையில் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் ஓடையில் தண்ணீர் வடிந்தோட வழியின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஓடையை ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்றி பராமரித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்