கருப்பூர் வெள்ளாளப்பட்டி சந்தைபேட்டை குடித்தெரு, ராஜவீதி ஆகிய பகுதிகளில் தெரு விளக்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த தெருவிளக்குகள் தற்போது சரிவர எரிவதில்லை காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் இங்கு நடமாட தயங்குகின்றனர். எனவே தெருவிளக்குகள் சரிவர எரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
-சவுந்தர், ஓமலூர்.