தர்மபுரி தாலுகா அலுவலகம் அருகே பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதிக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட சுகாதார வளாகங்கள் புதர் மண்டி இருந்தன. அண்மையில் இவை சீரமைக்கப்பட்டன. ஆனால் இவை இதுவரை முறையான பயன்பாட்டிற்கு வரவில்லை. தொடர்ந்து மூடி வைக்கப்பட்டுள்ள இந்த சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, தர்மபுரி.