கச்சிராயப்பாளையம் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவதால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.