ஆண்டிப்பட்டி தாலுகா டி.அழகாபுரியில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் திறந்தவெளியை பொது கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. எனவே கழிப்பறையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.