ஈரோடு முனிசிபல் காலனி கல்யாண விநாயகர் கோவில் பகுதியில் இருந்து பூங்காவுக்கு செல்லும் ரோட்டில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக நடந்து செல்பவரை துரத்தி சென்று தொல்லை கொடுத்து வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?